சென்னை மாவட்டத்தில் உள்ள போரூர் காவல் நிலையத்தில் கோபி கண்ணன் என்பவர் முதல் நிலை போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் குறித்து கோபி கண்ணன் தனது சமூக வலைதள பக்கத்தில் அவதூறாக பேசப்பட்ட வீடியோக்களை பதிவிட்டதாக தெரிகிறது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார். அவர் மீதான குற்றச்சாட்டு உறுதியானதால் கோபி கண்ணன் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டதோடு, ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.

இதே போல் போலீஸ் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் நேற்று முன்தினம் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த அறிவிப்புகளை விமர்சித்து வாட்ஸ் அப் மற்றும் முகநூலில் மீம்ஸ் போட்டு கருத்து பதிவிட்ட தேனாம்பேட்டை காவல் நிலைய ஏட்டு பாலமுருகனை சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.