“எங்க டீம் ரெடி, திமுக ரெடியா?” என கார்த்தி சிதம்பரம் எம்.பி ஓப்பனாகவே கேட்டுவிட்டார். தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் தாமதம் ஏற்படுவது திமுக தரப்பில்தான் என அவர் போட்டு உடைத்திருப்பது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தில் மக்கள் சந்திப்பு நடத்த காவல்துறை அனுமதி மறுத்தாலும், விடாமல் மீண்டும் மனு அளித்துள்ளனர் தவெக-வினர். “எங்கள் தலைவர் ஒரு ரோல் மாடல்” என நிர்வாகிகள் கோவை மற்றும் வேலூரில் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
“பாமக-வை திமுக கூட்டணியில் சேர்த்தால், நாங்கள் வெளியேறுவோம்” என விசிக தலைவர் திருமாவளவன் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். இது திமுக தலைமைக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
சசிகலாவைச் சந்தித்த காரணத்திற்காக நிர்வாகி ஜீவிதா நாச்சியாரை கட்சியை விட்டு நீக்கியுள்ளார் டிடிவி தினகரன். ஆனாலும், அதிமுக ஆட்சிக்கு வர சசிகலா தடையாக இருக்க மாட்டார் என அவர் ‘பதிலடி’ கொடுத்துள்ளார்.
தமிழக அரசின் 2026-27 நிதி ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி 17-ம் தேதி தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
