தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியும், முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரியுமான அருண்ராஜ் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது மாநில அரசின் மீது அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தார்.
சேலம் மற்றும் வேலூர் பகுதிகளில் விஜய் நடத்தத் திட்டமிட்டுள்ள மக்கள் சந்திப்பு மற்றும் பொதுக்கூட்டங்களுக்குக் காவல்துறை அனுமதி வழங்காமல் இழுத்தடிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு அரசியல் கட்சித் தலைவர் எப்படிப் பொறுப்புடன் இருக்க வேண்டும் என்பதற்குத் தலைவர் விஜய் தான் உதாரணம். அவர் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே செயல்படுகிறார்; ஆனால் அவர் வரும் வழியை அரசு மறிக்கிறது என்று அவர் சாடினார்.
“விஜய்க்கு மக்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பைப் பார்த்து மற்ற கட்சிகள் அஞ்சுகின்றன. அதனால்தான் எங்கள் பிரச்சாரப் பயணத்திற்குத் முட்டுக்கட்டை போடப்படுகிறது” எனத் தனது பேட்டியில் அருண்ராஜ் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
