
உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வலிமிகுந்த தோல்விக்குப் பிறகு முகமது ஷமியை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் கூறினார்..
2023 ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த தோல்வியின் மூலம் 3வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் இந்திய அணியின் கனவு தகர்ந்துள்ளது. அதோடு இந்தியாவை வீழ்த்தியதன் மூலம் 6வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ஆஸ்திரேலிய அணி. தோல்விக்கு பிறகு இந்திய வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மனம் உடைந்தனர். கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, முகமது சிராஜ் ஆகியோரின் கண்களில் கண்ணீர் வழிந்து பெருக்கெடுத்து ஓடியது. அதனை படங்களை பார்த்த ரசிகர்களும் உணர்ச்சிவசப்பட்டனர். தற்போதுவரை இந்த தோல்வியை இந்திய ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. இருப்பினும் இதிலிருந்து விரைவில் மீண்டு வருவார்கள் என்று நம்புவோம்..
இதனிடையே இந்திய அணியின் தோல்விக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடியும் தனது வீரர்களை ஊக்கப்படுத்த டிரஸ்ஸிங் அறைக்கு வந்தார். முகமது ஷமியை பிரதமர் மோடி கட்டிப்பிடித்து ஆறுதல் கூறினார். மேலும் ஜடேஜா உள்ளிட்ட வீரர்களையும் சந்தித்து ஊக்கப்படுத்தினார். பிரதமர் மோடி சந்தித்து உணர்ச்சிவசப்பட்ட இந்த புகைப்படத்தையும் ஷமி பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்துகொண்ட ஷமி, ‘துரதிர்ஷ்டவசமாக நேற்று எங்கள் நாள் அல்ல. போட்டி முழுவதும் எங்கள் அணிக்கும் எனக்கும் ஆதரவாக இருந்த அனைத்து இந்திய ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். குறிப்பாக டிரஸ்ஸிங் அறைக்கு வந்து எங்களை ஊக்கப்படுத்திய பிரதமருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் திரும்புவோம்.’ என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது..
மேலும் ரவீந்திர ஜடேஜா பிரதமரை சந்தித்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தில், பிரதமர் ஜடேஜாவுடன் கைகுலுக்குகிறார். அதில், ‘எங்கள் போட்டி மிகவும் சிறப்பாக இருந்தது, ஆனால் நேற்று நாங்கள் தோல்வியடைந்தோம். நாங்கள் அனைவரும் சோகமாக இருக்கிறோம், ஆனால் மக்களின் ஆதரவு எங்களை ஊக்கப்படுத்துகிறது. பிரதமர் நேற்று டிரஸ்ஸிங் ரூமுக்கு சென்றது சிறப்பானது மற்றும் மிகவும் உத்வேகம் அளித்தது என தெரிவித்துள்ளார்..
ஷ்ரேயாஸ் ஐயரும் உணர்ச்சிவசப்பட்ட பதிவைப் பகிர்ந்துள்ளார். ஸ்ரேயாஸ், ‘எங்கள் இதயங்கள் உடைந்துவிட்டன. அது இன்னும் அமைதியடையவில்லை, சிறிது நேரம் ஆகாது. இது எனக்கு நிறைய கற்றுக் கொடுத்த முதல் உலகக் கோப்பை. ஆரம்பம் முதல் இறுதி வரை எங்களுக்கு ஆதரவளித்த பிசிசிஐ, அணி நிர்வாகம், துணை ஊழியர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி. ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அணிக்கும் வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்..
Unfortunately yesterday was not our day. I would like to thank all Indians for supporting our team and me throughout the tournament. Thankful to PM @narendramodi for specially coming to the dressing room and raising our spirits. We will bounce back! pic.twitter.com/Aev27mzni5
— 𝕸𝖔𝖍𝖆𝖒𝖒𝖆𝖉 𝖘𝖍𝖆𝖒𝖎 (@MdShami11) November 20, 2023
PM of India Narendra Modi consoling Shami.
A painful day for India…!!! 💔 pic.twitter.com/6eKlb5f54E
— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 20, 2023
Reality of Hindutva PM Modi, trying to strangle Md Shami in anger, despite Shami having been a big contributor in India's journey to the finals of #WC2023 , whereas see how nicely he is smiling and shaking hands with Jadeja pic.twitter.com/Q0BBd4wgAX
— Sameer (@BesuraTaansane) November 20, 2023