பான் கார்டு என்பது ஆதார் போல மிக முக்கியமான ஆவணமாகும். பணப்பரிவர்த்தனைகள்  பாதுகாப்பாக நடைபெறுவதற்காக வங்கி கணக்கோடு பான் இணைப்பது கட்டாயம் என மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இது குறித்து இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் சில முக்கிய வழிமுறைகளை வழங்குகிறது. அதாவது வாடிக்கையாளர்கள் கட்டாயமாக பான் கார்டு தொடர்புடைய விவரங்கள், வங்கி கணக்கு விவரங்கள் போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் பான் விவரங்கள் மற்றும் கேஒய்சி விவரங்கள் முடிக்கப்படாத பட்சத்தில் வங்கி பரிவர்த்தனை கணக்குகள் முடக்கப்படும் எனவும் SEBI அறிவித்துள்ளது. எனவே கட்டாயமாக அனைத்து செயல்முறைகளையும் முடிக்கும்படி இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் அறிவித்துள்ளது.