சமூக வலைதளங்களில் தினமும் பல விசித்திரமான வீடியோக்கள் வைரலாவது வழக்கம். ஆனால், இப்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு கடைக்காரர் தனது கடைக்கு வந்த ஒரு ‘விசித்திரமான’ வாடிக்கையாளர் பற்றி நகைச்சுவையாகப் பேசியுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் @trendingdesh என்ற பயனர் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், கடைக்காரர் கையில் இரண்டு ஐஸ்கிரீம் கோன்களை வைத்துக்கொண்டு தனது குமுறலை வெளிப்படுத்துகிறார். அவர் கூறியதாவது, “ஒரு வாடிக்கையாளர் நேற்று இரவு 10 மணிக்கு இந்த 45 ரூபாய் ஐஸ்கிரீமை வாங்கிச் சென்றார்.

இன்று காலை 9 மணிக்கு வந்து அதைத் திருப்பிக் கொடுக்கிறார். ஏன் என்று கேட்டால், வீட்டுக்கு வந்த விருந்தினர்களுக்காக வாங்கினாராம். ஆனால் விருந்தினர்கள் ஐஸ்கிரீம் சாப்பிடவில்லை என்பதால், அதை அப்படியே கொண்டு வந்து ரிட்டர்ன் கொடுக்கிறார்.”

 

 

View this post on Instagram

 

A post shared by India | Trending Desh (@trendingdesh)

இதைக்கேட்ட கடைக்காரர் நக்கலாக, “ஐயா, விருந்தினர்கள் முன்னாடி கெத்து காட்ட ஐஸ்கிரீம் வாங்கிட்டு போறீங்க.. அவங்க சாப்பிடலைன்னா அதை நீங்களே சாப்பிட வேண்டியதுதானே? என் தலையில ஏன் கட்டுறீங்க? அந்த வீட்டுக்கு வந்த விருந்தினர்களே.. தயவுசெஞ்சு மறுபடியும் அவங்க வீட்டுக்குப்போய் இந்த ஐஸ்கிரீமை சாப்பிட்டுட்டு வாங்க!” எனச் சிரித்துக்கொண்டே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐஸ்கிரீம் பேக் செய்யப்பட்டிருந்ததாலும், அந்த வாடிக்கையாளர் வழக்கமாக கடைக்கு வருபவர் என்பதாலும் கடைக்காரர் அதைத் திரும்பப் பெற்றுக்கொண்டார்.