செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இங்கே சட்டம், நீதி எல்லாமே….. அண்ணன் கமல்ஹாசன் அவர்கள் நடித்த ”உன்னால் முடியும் தம்பி” படத்துல ஒரு பாடல் வரும். ஆள்வோர்கள்  போடும் சட்டம் எல்லாம், காசுள்ளோர்  பக்கம் சாயாதடா என்று ஒரு வரி இருக்கும். அதுதான் உண்மை. அது பலமுறை உங்களுக்கு உதாரணமாக எடுத்து  சொல்லிவிட்டேன்..

சாதாரண மக்களினுடைய வழக்குகள்,  நீதிமன்றங்களில் எவ்வளவு நாள் தேங்கி கிடக்குது. ஒரு அரசியல் கட்சி இந்த பொதுகுழு செல்லுமா ?  செல்லாதா என்று வழக்கு தொடுத்தால்,  முதல் நாள் வழக்கு தொடுத்தால் அடுத்த நாள் தீர்ப்பு  வந்துவிடுகிறது. இந்த சின்னம் யாருக்கு என்று கேட்டு  வழக்கு தொடுத்தால் அடுத்த நாள் தீர்ப்பு வருகிறது.

அப்படி ஏதாவது மக்களின் வழக்குகளுக்கு தீர்ப்பு வந்திருக்கிறதா ? பார்த்து இருக்கிறீர்களா ?  சமமாக இல்லை…  அதனால் புகழ் பெற்றவர்கள் வரும்பொழுது,  பளிச்சினை வெளிச்சத்திற்கு வந்துவிடுகிறது. உங்களுக்கு செய்தி ஆகிடுது… நாலு பேர் கவனிப்பார்கள் புகழ்பெற்ற கலைஞர்கள் சொன்னால் கவனிப்பு வரும்.

என்னை கேட்டால் நான் எல்லாரிடமும் அன்பாக வேண்டுகிறேன். மன்சூர் அலிகான் விஷயத்தை விட்டுருங்க.. இதை கடத்திவிட்டுட்டு வேற விஷயம் போங்க. அவர் பேசியதால் காயம் பட்டு இருந்தால் அவரிடம் ( திரிஷா ) , அவர் ( மன்சூர் அலி கான் ) சார்பாக நான் சொல்கின்றேன். நானே வருந்துகின்றேன். இந்த விஷயம் அவசியமற்றது என நான் நினைக்கின்றேன் என தெரிவித்தார்.