நீலகிரி மாவட்டம் முழுவதும் நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை வழக்கமாக உறை பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால் பகல் நேரத்திலும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்ட படி வாகனத்தை இயக்குகின்றனர்.

இந்நிலையில் குதிரை பந்தய மைதானம், முக்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் புல்வெளிகள் விளைநிலங்கள், தேயிலை தோட்டங்கள் ஆகியவை உறை பனியால் மூடி இருக்கிறது. இதனால் வேலைக்கு செல்பவர்கள், தூய்மை பணியாளர்கள் என ஏராளமான பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.