தஞ்சாவூர் தெற்கு வீதியில் புகழ் பெற்ற கலியுக வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் கும்பாபிஷேகம் தினத்தில் திருக்கல்யாணம் நடைபெறவு வழக்கம். இந்நிலையில் கும்பாபிஷேக திருவிழாவை முன்னிட்டு நேற்று சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.

இதனையடுத்து பக்தர்கள் சீர்வரிசைகளுடன் கோவிலுக்கு வந்தனர். இதனை தொடர்ந்து வெகு விமர்சையாக திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, உதவி ஆணையர் கவிதா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.