செய்தியாளர்களிடம் பேசிய கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன், ஒவ்வொரு பகுதி மக்களுடைய இடத்திற்கு சென்று வாகனம் வாயிலாக பல்வேறு அரசு திட்டங்களை எல்லாம் நிறைவேற்றி வந்தாலும் கூட அந்தந்த பகுதி நிர்வாகிகள்,  மக்களை சந்திப்பதற்கும்… மக்கள் உடனடியாக தங்களுடைய குறைகளை வந்து தெரிவிப்பதற்குமாக…..  ”மண்டல் அலுவலகம்” எம்எல்ஏ அலுவலகத்திற்கும்,  கட்சிக்கும் ஒரு மிகப்பெரிய பாலமாக…. மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பதில் உதவி புரியும் என்று நம்புகிறோம்.

வெற்றிகரமாக ராமநாதபுர மண்டலில் எங்களுடைய நிர்வாகிகள் தலைவர் திரு சிவகுமார் அவர்களுடைய தலைமையிலே அத்துனை நிர்வாகிகளும் ஒத்துழைப்பு கொடுத்து, மண்டல்  அலுவலகத்தை திறந்து  இருக்கிறார்கள். இதனோடு இணைந்து இ- சேவை மையத்தின் உடைய அத்தனை சேவைகள் கிடைப்பதற்கும் உறுதி செய்கிறோம். இவை இல்லாமல் தெற்கு சட்டமன்ற தொகுதியில் உறுப்பினருடைய பல்வேறு திட்டங்கள்…

குழந்தைகளுக்கு பால் கொடுப்பதாக இருக்கட்டும்….. இளம்பெண்களுக்கு சானிடரி நாப்கின்….. இங்கேயே ஒரு மிஷின் வச்சிருக்கோம்….. சானிட்டரி பேட் எல்லாத்தையும் இந்த அலுவலகத்தில் கூட பெண்கள் எடுத்துப் போய்க்கலாம்….. இந்த மாதிரி பல்வேறு சேவைகளை…… மக்களுடன் இன்னும் நெருக்கமாக செல்வதற்கு இம்மாதிரி அலுவலகங்கள் எங்களுக்கு உதவுகிறது… பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் மக்களுடன் நெருக்கமாக வருவதற்கு….. மக்கள் கட்சியை நம்பிக்கையோடு பார்ப்பதற்குமான பல்வேறு நல்ல சூழ்நிலைகள் உருவாகி கொண்டு வருகிறது என தெரிவித்தார்.