திண்டுக்கல் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 3-வது படை வீடாக போற்றப்படும் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் 16 வருடங்களுக்கு பின் வருகிற ஜனவரி 27 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ளது. வருகிற கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இந்து சமய அறநிலையத்துறை மற்றும் திருக்கோவில் நிர்வாகம் சார்பாக பல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பழனி கோவிலில் வரும் 27ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை முன்னிட்டு நேரில் சென்று ஆய்வு செய்தார் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு. இதையடுத்து அவர் பேசியதாவது “பழனியில் ஆகம விதிகளுக்கு உட்பட்டு தமிழிலும் கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் ராஜகோபுரம் மீதும், பக்தர்கள் மீதும் ஹெலிகாப்டர் மூலம் தீர்த்த நீர் தெளிக்க வாய்ப்பு உள்ளதா என ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.