ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள் யாரை வேட்பாளர்களாக நிறுத்தலாம் என ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கே சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் இவிகேஎஸ் இளங்கோவன் குடும்பத்தினர் தேர்தலில் நிற்காத நிலையில், திமுக-காங்கிரஸ் கூட்டணி சார்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடலாம் என கூறப்படுகிறது. சமீப காலமாக காங்கிரஸ் மற்றும் உதயநிதியுடன் இணக்கமாக இருக்கும் கமல் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.