பாகிஸ்தான் நாட்டில் கோதுமைக்கு கடுமையாக பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும் நிலையில் ஒரு கிலோ கோதுமை 160 ரூபாய்க்கு விற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கடும் உணவு நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. அங்கு உணவு பொருட்கள் மற்றும் காய்கறிகளின் விலை இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் கடுமையாக அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், கோதுமை மாவிற்கும் கடும் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது.

எனவே, அந்நாட்டின் பல பகுதிகளில் குறைவான விலையில் அரசாங்கத்தின் சார்பாக மக்களுக்கு கோதுமை பொட்டலங்கள் வழங்கப்படுகிறது. கோதுமை மாவிற்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால், குறைவான விலையில் கோதுமை வாங்கச் சென்று கூட்ட நெரிசல் சிக்கி நான்கு பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோதுமை மாவின் விலை வியர்வை தொடர்ந்து ரொட்டி மற்றும் பேக்கரி கடைகளில் கோதுமையால் தயாரிக்கப்படும் பொருட்களின் விலையும் கடுமையாக அதிகரித்து இருக்கிறது. பேக்கரி வைத்திருப்பவர்கள், மின்சாரத்திற்கு ஆகும் அதிக செலவு மற்றும் எரிசக்தி தட்டுப்பாடு போன்றவற்றால் தான் கோதுமை மாவின் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டதாக கூறியிருக்கிறார்கள். விலை அதிகம் என்பதால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கோதுமை வாங்க முடியாத நிலையில் இருப்பதாக பொதுமக்கள் கூறியுள்ளனர்.