அமெரிக்க அரசு தங்கள் நாட்டில் வசிக்கும் பிரிட்டன் இளவரசர் ஹாரியின் குடும்பத்தினரை, வெளியேற்ற உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள Montecito என்ற நகரத்தில் பிரிட்டன் இளவரசர் ஹாரி தன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அங்கு பல தொலைக்காட்சி பிரபலங்களும் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் அந்த பகுதியில் திடீரென்று பெய்த கனமழை மற்றும் புயல் ஆகிய காரணங்களால் சமீப நாட்களாக மக்களின் இயல்பு நிலை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

10 நாட்களில் அங்கு வசிக்கும் 12 நபர்கள் பலியாகியுள்ளனர். எனவே, அப்பகுதியைச் சேர்ந்த 90% மக்களை அவர்களின் குடியிருப்புகளிலிருந்து வெளியேற்ற உத்தரவிடப்பட்டிருக்கிறது. அந்த நகரில் வசிக்கும் பிரிட்டன் இளவரசர் ஹாரியும் குடும்பத்தினருடன் வெளியேற வேண்டும் என்று தீயணைப்பு படையினர் எச்சரித்திருக்கிறார்கள்.