பிரிட்டன் இளவரசர் ஹாரி, தன் தாயின் மரணத்தை சுயலாபத்திற்காக பயன்படுத்திக் கொண்டார் என்று ஒருவர் மீது குற்றம் சாட்டியிருக்கிறார்.

பிரிட்டனில் மறைந்த இளவரசி டயானாவின் பட்லராக இருந்த Paul Burrell என்பவர், இளவரசி டயானா தன்னை நம்பிக்கைக்குரியவர் ஆக கருதினார் என்று அவரே தெரிவித்திருந்தார். இவர் தான் இளவரசி டயானாவின் மரணம் தொடர்பில் “ராயல் டியூட்டி” என்று புத்தகத்தை எழுதி வெளியிட்டார்.

மேலும் இளவரசி டயானா பற்றி நேர்காணல்களும் அவ்வப்போது கொடுத்திருக்கிறார். எனவே, தன் தாய், எனது நண்பர் என்று கூறிய ஒருவரே, அவரின் மரணத்தை சுய லாபத்திற்காக பயன்படுத்தி பணம் சம்பாதித்து விட்டார் என்று குறிப்பிட்டு இருக்கிறார். அவர், இளவரசி டயானா பற்றி புத்தகம் எழுதி வெளியிட்டது பற்றி தெரிந்த உடன் தனது ரத்தம் கொதித்ததாக இளவரசர் ஹாரி கூறியிருக்கிறார்.

உடனே அதனை தட்டிக் கேட்க சென்ற தன்னை தந்தை சார்லஸ் மற்றும் சகோதரர் வில்லியம் இருவரும் தடுத்து விட்டதாக கூறியிருக்கிறார். இல்லை எனில் அவரை ஒரு வழியாக்கியிருப்பேன் என்று கூறியிருக்கிறார்.