இங்கிலாந்து நாட்டில் முதல் தடவையாக விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட் தோல்வி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து, முதல் தடவையாக ராக்கெட்டை விண்ணிற்கு அனுப்பும் பணியை மேற்கொண்டு வந்தது. போயிங் விமானத்தில், ராக்கெட்டை ஒன்பது செயற்கைக்கோள்களுடன் பொருத்தி அதில் இணைத்து, கார்ன்வாலில் இருக்கும் விண்வெளி தளத்தில் வைத்து, விண்ணில் செலுத்தினர். ராக்கெட், வெற்றிகரமாக விமானத்திலிருந்து பிரிந்து விண்வெளிக்கு புறப்பட்டது.
ஆனால், 9 செயற்கைக்கோள்களும் சுற்றுவட்ட பாதையில் சரியாக நிலைநிறுத்தப்படவில்லை. எனவே, இங்கிலாந்து நாட்டின் முதல் முயற்சி தோல்வியடைந்தது. இது பற்றி விரிஜின் ஆர்பிட் நிறுவனம் குறிப்பிட்டிருப்பதாவது, சுற்றுப்பாதையை செயற்கைக்கோள்கள் சென்றடைவது குறித்த எங்களின் முதல் ட்விட்டை நீக்குகிறோம்.
எங்களால் முடிந்தவரை அதிக தகவல்களை தெரியப்படுத்துவோம் என்று கூறியிருந்தது. தங்கள் மண்ணில் முதல் தடவையாக ஏவப்பட்ட ராக்கெட் தோல்வியடைந்ததால் விஞ்ஞானிகள் வருத்தமடைந்திருக்கிறார்கள். வெற்றிகரமாக இந்த ராக்கெட் அனுப்பப்பட்டிருந்தால், பூமியின் சுற்றுவட்ட பாதையில் ராக்கெட்டை அனுப்பிய நாடுகளில் இங்கிலாந்தும் இடம்பெற்றிருக்கும்.