கடந்த 5 வருடங்களுக்கு முன்பு துனிசியா நாட்டைச் சேர்ந்த ஒருவரையும், அவரது மனைவியையும் போலீசார் கைது செய்துள்ளனர். அதாவது அவர்கள் ricin என்னும் ரசாயன பொருட்களை கொண்டு வந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர்.  இது தெரிய வந்ததை தொடர்ந்து அந்த ஆணுக்கு 10 வருடங்கள் சிறை தண்டனையும், பெண்ணுக்கு 8 வருடங்கள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த முறை சயனைடு மற்றும் ricin போன்ற  ரசாயனங்களைக் கொண்டு அதே போன்றதொரு தாக்குதலை சிலர் நடத்த உள்ளதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஈரான் நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவரும், மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர். castrop -Rauxel என்ற ஜெர்மன் நகரில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.