நாகப்பட்டினம்: தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய், நாகை பிரசாரத்தில் மீனவர்கள் மற்றும் ஈழத்தமிழர்களுக்காக உருக்கமாக குரல் கொடுத்தார்.

“நமது தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர்கள், இலங்கையிலோ, உலகின் எந்த மூலையிலோ இருந்தாலும், தங்கள் தலைவனை இழந்து தவிக்கிறார்கள்.

அவர்களுக்காக குரல் எழுப்புவதும், அவர்களோடு துணை நிற்பதும் நமது கடமை இல்லையா?” என்று உணர்ச்சிப் பொங்க கேள்வி எழுப்பினார்.

“மீனவர்களின் உயிர்கள் எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு ஈழத்தமிழர்களின் வாழ்க்கையும், கனவுகளும் மிகவும் முக்கியம். அவர்களின் துயரங்களுக்கு நாம் தோள் கொடுக்க வேண்டும்,” என்று விஜய் தனது பேச்சில் வலியுறுத்தினார். நாகை மக்கள் மத்தியில் அவரது இந்த உருக்கமான பேச்சு, தமிழர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தி, பெரும் ஆதரவை பெற்றது.