உத்திரப்பிரதேசம் அலிகர் மாவட்டத்தில் கால்நடை மருத்துவர் ஒருவர் ஆமை ஒன்றின் ஓட்டில் அரிய அறுவை சிகிச்சை செய்து அதற்கு உயிர் கொடுத்தார். இந்த ஆமைக்கு 3 வயது இருந்தபோது உயரத்திலிருந்து கீழே விழுந்து உள்ளது. இதையடுத்து ஆமையை நாய் தூக்கி சென்றதில் அதனுடைய ஓட்டில் விரிசல் ஏற்பட்டது. அதன்பின் ஆமை நடப்பதில் சிக்கல் ஏற்பட்டு ஓட்டில் ஏற்பட்ட விரிசலில் இருந்து ரத்தம் கசியத் துவங்கியது.

அதனை தொடர்ந்து ஆமையின் உடைந்த ஓடுக்கு இரும்புக் கம்பி வாயிலாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இது பிரேஸ்கள் (அ) ஸ்பிளிண்ட் என அழைக்கப்படுகிறது. பொதுவாக இது வளைந்த பற்களை கட்டப் பயன்படுகிறது. உத்திரப்பிரதேசம் மாநிலம் காசிம்பூரில் வசிக்கும் சுதிர் என்பவர்தான் இந்த ஆமையின் உரிமையாளர் ஆவார்.