இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. இவருடைய மனைவி நீட்டா அம்பானி. இவர் தன்னுடைய கணவருடன் ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது மிகவும் ஆடம்பரமான ஆடை மற்றும் விலை உயர்ந்த காலணிகளை அணிந்திருந்தார். அப்போது நீட்டா அம்பானியின் காலனி மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. அந்த காலணியின் விலை எவ்வளவு ரூபாய் இருக்கும் என்று பலரும் யோசித்தனர்.

இந்நிலையில் அந்த காலணியின் விலை தற்போது வெளிவந்துள்ளது. அதாவது அதன் விலை 76 ஆயிரத்து 900 ரூபாய் ஆகும். மேலும் எந்த ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் மற்றவர்களை விட தன்னை சிறப்பானவராக காண்பித்துக் கொள்ள வேண்டும் என்பதில் நீட்டா அம்பானி கவனமாக இருப்பதால் விலை உயர்ந்த ஆடைகள் மற்றும் காலணிகளை அணிவார். நீட்டா அம்பானிக்கு தற்போது 58 வயது ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.