இந்தியாவில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மூலம் அதிக ஓய்வூதியம் பெற விரும்புபவர்கள் மார்ச் 3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது அதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் அதிக ஓய்வூதியம் பெற விரும்புபவர்கள் மே 3-ஆம் தேதி வரை அதற்காக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் அதிக ஓய்வூதியம் பெற விரும்புபவர்களுக்கு அதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. மேலும் இந்த உத்தரவின்படி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் அதிக ஓய்வூதியம் பெற விரும்புபவர்கள் அதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அதற்கான கால அவகாசமும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இபிஎஃப்ஓ அமைப்பிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு அந்த நிறுவனம் தற்போது பதில் கொடுத்துள்ளது. அதாவது அதிக பென்ஷன் தொகை பெறுவதற்கு இதுவரை ஒருவர் கூட விண்ணப்பிக்கவில்லையாம். இந்த திட்டத்துக்கு சம்பந்தப்பட்ட நபரும் அவர் வேலை பார்க்கும் நிறுவனமும் இணைந்து தான் விண்ணப்பிக்க வேண்டும். அப்போதுதான் அவருடைய அடிப்படை சம்பளத்தை பொறுத்து அதிக பென்ஷன் தொகை கிடைக்கும். இதற்கு பிஃஎப் அமைப்பிடம் முதலில் அனுமதி பெற வேண்டியது அவசியம். அதிக பென்ஷன் தொகை பெற பிஃஎப் அமைப்பிடம் விண்ணப்பித்து அதற்கான அனுமதி பெற்று பிறகு தான் விண்ணப்பிக்க முடியும். மேலும் இந்த புதிய வசதியை பெறுவது சிக்கலானது என்பதால் ஒருவர் கூட விண்ணப்பிக்க முன் வரவில்லை என்று கூறப்படுகிறது.