ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள விஜயநகர மாவட்டத்தில் வழக்கறிஞராக பணிபுரியும் கோதாவரி மதுசூதனன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி சாய் சுப்ரியா. இந்நிலையில் சாய் சுப்ரியாவை பார்க்க வேண்டும் என்று மதுசூதனனிடம் அவருடைய தாய் மற்றும் சகோதரர் கேட்டுள்ளனர். ஆனால் அவரிடம் இருந்து எந்த பதிலும் வராததால் அவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கோர்ட்டில் வாரண்ட் வாங்கிவிட்டு மதுசூதனன் வீட்டில் சோதனை நடத்தினர்.
அப்போது ஒரு இருட்டு அறையில் சாய் சுப்ரியா இருந்தார். அவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கடந்த 11 வருடங்களாக மதுசூதனன் சாய் சுப்ரியாவை இருட்டு அறையில் அடைத்து வைத்தது தெரிய வந்தது. இதனையடுத்து கோர்ட் உத்தரவின் பேரில் மதுசூதரன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.