செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், சென்னையிலும் பார்த்தீங்கன்னா 40  சென்டிமீட்டர் மழை பெய்து இருக்கு….  அரசு என்ன சொல்லி இருக்கு ? 20 சென்டிமீட்டர் பெய்யும் என்று சொன்னாங்க… ஆனால் அதற்க்கு  ரெண்டு மடங்கு பெய்ந்து இருக்கு….  இங்கே அது கூட சொல்லல….. ஆரஞ்சு அலெர்ட்….. ஆரஞ்சு அலெர்ட்ன்னு சொன்னா போதுமா ?

அது மட்டுமல்ல  தாமிரபரணியில் மிகப்பெரிய சேதம்…..  தாமிரபரணி ஆற்றினால்….. வெள்ளத்தினால் மிகப்பெரிய சேதம்….   இன்னும் எத்தனை பேர் இறந்திருக்காங்கன்னு முழுசா கணக்கு சரியா தெரியல… அரசு ஏதோ  25,  30 அப்படின்னு சொல்லிட்டு இருக்காங்க…. நிச்சயமா சேதம் இன்னும் அதிகமாகத்தான் இருக்க போகுது….  இன்னும் சரியான கணக்கெடுப்பு நடக்கல…

சில கிராமங்களுக்கு இன்னும் போகல….    இதுல நிவாரணம் பணிகளை வேகப்படுத்தவும்…. அமைச்சர்கள் இங்கு இருக்குறாங்க ஏதோ பண்றாங்க… நான் பண்ணலேன்னு சொல்லல…..  இன்னும் வேகப்படுத்துங்க...மக்களை சந்திக்கிறப்போ,  அவங்க சொல்ற குறைகள் எல்லாம் தாங்க முடியல… எப்பதான் நீங்க பாடத்த கத்துக்க போறீங்க ? எத்தனை புயல நீங்க பார்த்திருப்பீங்க ? எத்தனை வெள்ளத்தை பார்த்து இருப்பீங்க ? பார்த்துட்டு இன்னொன்னு கத்துக்கணும்… அதே நிலையில் தான் இருக்கு என தெரிவித்தார்.