தமிழகத்தில் மின் நுகர்வோர் தங்களுடைய மின் கட்டணத்தை செலுத்த நேரடியாக மட்டுமல்லாமல் இணையதளம் மற்றும் செயலை உள்ளிட்ட பல வசதிகளை மின்வாரியம் செய்து கொடுத்துள்ளது. இந்த நிலையில் கைபேசியில் மின்வாரியம் மூலம் வரும் அதிகாரப்பூர்வ குறுஞ்செய்தியில் மின் கட்டணத்திற்கான தொகையை எளிதாக செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் கட்டணம் செலுத்துவதற்கான குறுஞ்செய்தி நுகர்வோரின் கைபேசி எண்ணுக்கு வந்ததும் அதில் உள்ள இணைப்பை கிளிக் செய்ய வேண்டும். பிறகு அதன் அருகில் உள்ள பெட்டியில் கேப்சா உள்ளிட்டு கட்டணம் செலுத்தும் செயல்முறையை தொடங்க வேண்டும். அதில் எந்த வகையில் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதை தேர்வு செய்து அதன் பிறகு மின்கட்டணத்தை நீங்கள் செலுத்தலாம். இதன் மூலமாக எளிதில் மின் நுகர்வோர் தங்களுடைய மின் கட்டணத்தை செலுத்த முடியும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.