செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், மத்திய அரசு தமிழக அரசு  கேட்ட நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும்… இதில் அரசியல்  பார்க்க கூடாது… இது மக்கள் சார்ந்த பிரச்சனைகள்.. பாதிக்கப்பட்ட மக்கள் நிலத்தில்… இந்த நேரத்தில் அந்த அரசு, அந்த அரசு எல்லாம் பாக்காதீங்க… உடனடியாக நிவாரணம் குறைந்தது 2000 கோடி உடனடியாக மத்திய அரசு மாநில அரசுக்கு முதல் தவணையாக கொடுக்க வேண்டும்… சாதாரண பாதிப்பு கிடையாது. நானும் பல வெள்ளங்களை பார்த்துள்ளேன்…

இங்கு ஏற்பட்டிருப்பது மிகப்பெரிய பாதிப்பு… வீடுகள் எல்லாம் சுத்தமாக தரைமட்டமாகிவிட்டது…..  நிலமெல்லாம் அழிந்து போயிடுச்சு…. கால்நடைகள் எல்லாம்  இறந்துடுச்சு….. வாழ்வாதாரம் இல்லை இப்போ….. அவங்களுக்கு என்ன செய்யப் போறீங்க ? கரையோரத்தில் இருக்கக்கூடிய படகுகள் எல்லாம் போயிடுச்சு….

தாமிரபரணி முகதுவாரம் அங்க பார்த்தால் பாவமா இருக்கு…. இப்படி பல பகுதிகள், தீவு தீவாக இருக்கு. அதானால்  தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுங்கள்….. வேகப்படுத்துங்கள்…. வேலையை வேகப்படுத்துங்க… நிவாரணத்தை அதிகப்படுத்துங்கள்…. போதுமானது  கிடையாது… அதிகப்படுத்துங்கள்…. 6000 ரூபாய் போதுமானது கிடையாது…. முதல் தவணை பத்தாயிரம் ரூபாய் கொடுங்க…… அடுத்த தவணை பத்தாயிரம் ரூபாய் கொடுங்க…. வீடுகளுக்கு கூடுதலாக கொடுக்கணும் …ஒரு ஹெக்டருக்கு 17,000 சொல்லியிருக்காங்க….

ஒரு ஹெக்டருக்கு 2.4 ஏக்கர் ஒரு ஹெக்டேர். அப்பனா ஒரு ஏக்கருக்கு எவ்வளவு கொடுப்பீங்க ? ஒரு 6000 ரூபாய் 5500 ரூபாய் ஒரு ஏக்கருக்கு…. அவ்வளவு போதுமானதா ? மனசாட்சி வேணுமில்ல… அதனால் மிகப்பெரிய பாதிப்பு இருக்கு….  அதனால் இதை எல்லாம் உடனடியாக தமிழக அரசு வேலைகளை வேகப்படுத்த வேண்டும்….  மீட்பு பணிகளை வேகப்படுத்த வேண்டும்….  மின்சாரத்தை மின்சார விநியோகம் சீராக இருக்க வேண்டும்….  இந்த நான்கு மாவட்டத்தில்  அடுத்த ஒரு மாதம்  மின்கட்டண கேட்காதீங்க…  மின் கட்டணத்தை  ரத்து பண்ணுங்க ஒரு மாதத்திற்கு….. இது  எல்லாம் இங்க மக்களுக்கு தேவைகளாக இருக்கிறது என தெரிவித்தார்.