நடிகரும் தேமுதிக தலைவருமான நடிகர் விஜயகாந்த் நேற்று காலமான நிலையில் அவரது மரணம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் முழுகியுள்ளது. இதனை தொடர்ந்து அவரது உடலுக்கு திரை பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் சின்ன கவுண்டர் படத்தில் நடிக்கும் போது ஏழ்மையில் இருந்த வடிவேலுக்கு 5 செட் துணிகளை வாங்கித் தந்த கேப்டன் தனது பல படங்களில் கூடவே நடிக்கவும் வைத்தார். ஆனால் இருவருக்கும் அரசியல் ரீதியாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு மோதலாக மாறியது. இருந்தாலும் கடைசி வரைக்கும் வடிவேலுவை விஜயகாந்த் விமர்சித்தது இல்லை. கேப்டன் நேற்று உயிரிழந்த நிலையில் தற்போது வரை வடிவேலு அஞ்சலி செலுத்த வரவில்லை என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்