விஜயகாந்தை கொலை செய்தவர்கள் யார் என்று கண்டுபிடிங்கள் என பிரபல இயக்குனர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. நேரம், பிரேமம் மற்றும் கோல்டு உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கிய பிரபல மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உதயநிதியை டேக் செய்து விஜயகாந்தை கொலை செய்தவர்களை கண்டுபிடிங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவை கொலை செய்தவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என்று உங்களிடம் வேண்டுகோள் விடுத்தேன். இப்போது அந்த பட்டியலில் விஜயகாந்தை சேர்த்துக் கொள்ளுங்கள். முதல்வர் ஸ்டாலின் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர்களை கொலை செய்ய முயற்சி நடந்துள்ள நிலையில் இதை அப்படியே விட்டு விட்டால் அது உங்கள் வரை ஆபத்தாக அமையும். உங்களுக்கு கொலையாளிகளை கண்டுபிடிப்பது பெரிய வேலை கிடையாது என்று அவர் பதிவு செய்துள்ள நிலையில் இந்த பதிவு தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது.