
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசும் போது, 10 முறை நாங்கள் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓபிஎஸ்ஐ முன் வரிசையில் இருந்து எடுத்துவிட்டு, அந்த இடத்தில் ஆர்பி உதயகுமாரை போடணும் என்று பலமுறை சொல்லியும், இதுவரை சபாநாயகர் எங்களுடைய கோரிக்கையை ஏற்கவில்லை என்று பேசினார்.
இதற்கு சபாநாயகர் அப்பாவு ஒரு விளக்கம் கொடுத்தார். இருக்கை விகாரத்தை பொருத்தவரை தன்னுடைய உரிமை எனவும், அதில் யாரும் தலையிட முடியாது, யாரை எங்கே அமர வைக்க வேண்டும் என்பதில் சபாநாயகர் உரிமை எனவும் பேசினார்.
எதிர்க்கட்சித் தலைவர் பல்வேறு உச்சநீதிமன்ற தீர்ப்புகளையும் சுட்டிக்காட்டி ஏற்கனவே அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு எல்லாத்தையும் சுட்டிக்காட்டி பேசிய நிலையில் அதிமுக இந்த விவகாரத்தில் வெளிநடப்பு செய்திருக்கிறது.