ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜா ரயில் தண்டவாளத்தை ஒருவர் கடக்க முயன்றார். அப்போது பாட்னாவில் இருந்து பெங்களூர் நோக்கி செல்லும் பாடாலிபுத்திரா எக்ஸ்பிரஸ் ரயில் மோதி அந்த நபர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இதுகுறித்த அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அந்த நபர் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.