புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கிடகுளம் பகுதியில் பிச்சை(48) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பைக் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பிச்சை மோட்டார் சைக்கிளில் கைகாட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பிச்சையை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.