கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளக்கிணறு பகுதியில் பெலிக்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தினேஷ் என்பவருடன் இணைந்து சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர் சாலையில் ட்ரேட் குயின் ஹெல்த் மேனேஜ்மென்ட் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி 1 லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 5 ஆயிரம் ரூபாய் தருவதாக அறிவித்தனர். இதனை நம்பி பலர் முதலீடு செய்தனர். இந்நிலையில் 8 லட்ச ரூபாய் முதலீடு செய்த பிரதீப் ராஜா என்பவருக்கு சில மாதங்கள் மட்டும் லாபத்தில் பங்கு என கூறி 40000 ரூபாய் கொடுத்து மீதி பணத்தை கொடுக்காமல் ஏமாற்றிவிட்டனர்.

இதுகுறித்து பிரதீப் ராஜா கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் பெலிக்சும், தினேஷும் இணைந்து பலரிடம் இருந்து 71 லட்சம் ரூபாய் வரை வாங்கி மோசடி செய்தது தெரியவந்தது. இதனால் பெலிக்சை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் தினேஷை தீவிரமாக தேடி வருகின்றனர்.