உணவு கழிவு உலகில் மிகப்பெரிய பிரச்சனையை சமீப காலங்களாக உருவாக்குகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பல மில்லியன் டன் உணவுப்பொருட்கள் வீணாக்கப்படுவதாக ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன. இதனைத் தொடர்ந்து உணவை வீணாக்குவதில் முதல் 10 நாடுகள் பின்வருமாறு,

1.  சீனா முதலிடத்தை பெற்றுள்ளது. சீனாவில் உணவு கழிவுகள் 91 மில்லியன் டன் ஆகும். இதற்கு காரணம் அந்த நாட்டின் அதிக மக்கள் தொகையை ஆகும்.

2. இந்தியா 2ஆவது இடத்தை பிடித்துள்ளது. 2. இந்தியாவில் மட்டும் இதுவரை 68 மில்லியன் டன் உணவு கழிவுகள் வீணடிக்கப்பட்டுள்ளது. உலக மக்கள் தொகையில் 2ஆவது இடத்தில் உள்ளதால் மக்கள் தொகை பெருக்கமே உணவு பொருள் வீணடிப்பதற்கான முக்கிய காரணமாகும்.

3. அமெரிக்கா 3ஆவது இடத்தில் உள்ளது. அமெரிக்காவின் உணவு கழிவுகளின் மொத்த அளவு 19 மில்லியன் டன் ஆகும். இங்கு மக்கள் தொகை ஒரு காரணமாக கூற முடியாது உலகின் சக்தி வாய்ந்த நாடாக உள்ள அமெரிக்கா உணவு நுகர்வோராக இருப்பது இதற்கு முக்கிய காரணம்.

4. ஜப்பான் 4ஆவது இடத்தை பிடித்துள்ளது ஜப்பானில் உணவு கழிவுகளின் அளவு 8 மில்லியன் டன் ஆகும். இங்கும் மக்கள் தொகை காரணமாக அதிக அளவு உணவு வீணாக்கப்படுகிறது.

5. 5ஆவது இடத்தில் ஜெர்மனி உள்ளது. இங்கு உணவு கழிவுகளின் மொத்த அளவு 6மில்லியன் டன்  உள்ளது. ஜெர்மனியிலும் செல்வ செழிப்பின் காரணமாகவே அதிகப்படியான உணவுகள் வீணடிக்கப்படுகின்றன.

6. பிரான்ஸ் 6ஆவது இடத்தை பிடித்துள்ளது. பிரான்சின் உணவு கழிவின் மொத்த அளவு 5 மில்லியன் டன் ஆகும். வேகவைத்த உணவுப் பொருட்களை அதிகம் விரும்பும் பிரான்ஸ் நாடும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

7. இங்கிலாந்து 7ஆவது இடத்தில் உள்ளது. இந்த நாட்டின் உணவு கழிவு மொத்தம் 5 மில்லியன் டன்கள் ஆகும்.

8. ரஷ்யா 8ஆவது இடத்தில் உள்ளது. ரஷ்யாவில் உணவு கழிவுகளின் மொத்த அளவு 4 மில்லியன் டன். மிகப்பெரிய நாடாக கருதப்படுவதால் மக்களின் எண்ணிக்கையை பொறுத்து இங்கு உணவு கழிவுகள் அதிகமாக உள்ளது.

9. ஸ்பெயின் 9ஆவது இடத்தில் உள்ளது ஸ்பெயினில் உணவு கழிவுகளின் அளவு 3 மில்லியன் டன். ஸ்பெயின் கொண்டாட்டங்களுக்கு சிறந்த நாடாகும் எனவே அதில் பெரும் பகுதி உணவு வீணடிக்கப்படுகிறது.

10.  10ஆவது இடத்தில் ஆஸ்திரேலியா உள்ளது. இதன் உணவு கழிவின் மொத்த அளவு 2 மில்லியன் டன் ஆகும். பசுமை பாதுகாப்பு முயற்சியில் உள்ள ஆஸ்திரேலியாவும் இந்த பட்டியல் இடம்பெறுவது மிகவும் ஆச்சரியத்தில் ஒன்றாகும்.