தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் அபிராமி வெங்கடாசலம். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் நடிக்கும் லியோ படத்தில் அபிராமி நடிக்கிறார்.

இந்நிலையில் நடிகை அபிராமி தன்னுடைய முதுகில் நடராஜர் உருவத்தை டாட்டூவாக போட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை நடிகை அபிராமி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இங்கெல்லாம் கூடவா டாட்டூ போடுவார்கள் என்று ஷாக்காகி உள்ளனர்.