விழுப்புரத்தில் உள்ள ரயில் நிலைய 6-வது நடைமேடையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 55 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடப்பதை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை.

இதனையடுத்து போலீசார் முதியவரின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் இறந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.