செய்தியாளர்களிடம் பேசிய தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு,  திரு கோயில்களை அரசியல் ஆபத்திற்காக…..  அரசியல் செய்வதற்கு பயன்படுத்தினால் இந்த ஆட்சி நிச்சயம் அதை அனுமதிக்காது. முதலில் நம்முடைய நிருபர் தெரிந்து கொள்ள வேண்டியது. சென்னை மாநகரத்தில் எந்தவிதமான விளம்பர பதாகைகளும் அனுமதி இன்றி வைக்கப்பட்டால்,  அகற்றுவது அரசினுடைய கடமை. அந்த வகையில் நீங்கள் அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட விளம்பர பலகையை அகற்றுவது மாநகராட்சியின் உடைய கடமையா ? இல்லையா ?

அப்படி அகற்றப்பட்ட பேனருக்காக…  நீங்கள் முறையீடு செய்வது உங்களுக்கு உரிய ஜனநாயக கடமை. அதில் எந்தவிதமான மாறுபட்ட கருத்தும் எங்களுக்கு இல்லை. ஆனால் அதற்காக அரசியல் செய்ய வேண்டும். என்ற நோக்கத்தோடு கபாலீஸ்வரர் கோயில் உள்ளே அனுமதி இன்றி கூட்டமாக இரண்டு மூன்று மனுக்களை கையில் ஏந்தியபடி அரசுக்கு எதிராக…

கபாலீஸ்வரிடம் மனு கொடுக்கப் போகிறோம் என்று கூட்டமாக சென்று அரசியல் செய்வது எந்த வகையில் நியாயம் ? எங்கள் முதல்வரை பொறுத்த அளவில் ஆன்மீக தளத்திலே… அதுவும் இறைவன் வழிபாடு செய்யும் இடத்திலே…. எந்தவிதமான அரசியலும் செய்யக்கூடாது என்று உத்தரவு விட்டு இருக்கிறார்.  ஆகவே இது சட்டத்தின் ஆட்சி என்பதால்,  சட்டப்படி இது போன்ற விதி மீறல்களுக்கு  நடவடிக்கை எடுப்பது தவிர்க்க முடியாதது என கூறினார்.