திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சபாநாயகர் அப்பாவு, நான்  கூடுவாஞ்சேரியில் வைத்து ஒரு பேட்டி கொடுத்தேன். மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகள் அவங்க மேல எல்லாம் மணல் தவறு செய்ததாக சொன்னாங்க….  அது விஷயமாக என்கிட்ட  கூடுவாஞ்சேரியில் கேட்டாங்க….  நான் அவுங்க கிட்ட  சொன்னேன்….  அத நீங்க கேட்கிறீங்க… ஒன்றிய அரசு சார்பாக வரக்கூடிய ஆட்கள் ( ED )  2012 இல் இருந்து 2016 வரைக்கும் நான்காண்டு காலம்…..  தமிழக மின்வாரியத்திற்கு வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதிக்கு ஒப்பந்தம் செய்தவர் மாண்புமிகு பாரத பிரதமர் மோடி அவர்கள்  நண்பர் அதானி அவர்கள்…

அந்த அதானி அவர்கள்… இந்த  நான்கு ஆண்டு காலத்தில்  தமிழக மின்வாரியத்திற்கு 6000 எரி திறன் உள்ள நிலக்கரி அனுப்புறேன்னு என  சொல்லி,  3500 எரி திறன் உள்ள நிலக்கரியை தான் அனுப்பி இருக்காங்க… 3500 தான் அனுப்புனாங்க என சொல்றதுக்கு ஆதாரம் இருக்கு.  இந்தோனேசியாவில் எடுத்திருக்காங்க…  ஆர்ஜின் சர்டிபிகேட் இருக்கு….. அதுல 3500 தான் இருக்கு….  17,  18 ஆர்.டிட் ரிப்போர்ட்ல 813 கோடி ரூபாய் தமிழ்நாடு மின்வாரியத்திற்கு இழப்பு என  நான் சொல்லல…. அவங்க சொல்றாங்க…..

அதே போல தமிழ்நாடு மீன் வாரியத்துக்கு சோலார் பவர் அதானி போட்டு தராங்க….  756 மெகாவாட் தராங்க….. அந்த 756 மெகவாட்டுக்கு ஒப்பந்தம் கையெழுத்து ஆகுது….  அப்போது TANGEDCOவினுடைய தலைவர், 2  உறுப்பினர் இருப்பாங்க…. அதுல ஒரு உறுப்பினர் சொன்னாரு 7 ரூபாய் 1 பைசாவுக்கு நாம அக்ரீமெண்ட் போடக்கூடாது. இன்னைக்கு 5 ரூபாய் 45 காசு தான் அப்படின்னு நான் சொல்லல…  அந்த மூணு பேர்ல ஒரு ஆளு நாகல் சாமி சொல்றாரு….  பத்திரிக்கை செய்தி இருக்கு…. மீடியாவை சந்திச்சு இதே போல சொல்றாரு….

இவ்வாறு 5 ரூபாய் 45 பைசாவிற்கு பதிலாக 7  ரூபாய் 1 பைசாவுக்கு அக்ரிமெண்ட் போட்டால்  மின்வாரியத்திற்கு 20 ஆயிரம் கோடி லாஸ்னு சொல்றாரு…. ED  இருக்கா ? இல்லையா ?  தமிழ்நாட்டுல ED  இருக்கு இல்ல…  813 கோடி ரூபாய் ஆடிட்டிங் ரிப்போர்ட்ல இருக்கிறதை ஏன் கேட்கல…   அதே போல நம்முடைய மின்வாரியத்திற்கு 7  ரூபாய் 1 பைசா என ஒன்றிய அரசுக்கு கொடுத்திருக்காங்க என தெரிவித்தார்.