கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செட்டியக்காபாளையத்தில் கன்னியம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சர்க்கரை நோய் மற்றும் நெஞ்சுவலியால் அவதிப்பட்ட கன்னியம்மாள் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் நோய் குணமாகவில்லை.

இதனால் மன உளைச்சலில் இருந்த கன்னியம்மாள் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரம் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கன்னியம்மாள் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.