திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேனாந்தல் கிராமத்தில் விசாலாட்சியம்மாள்(71) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 10 வருடங்களாக விசாலாட்சியம்மாள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த மூதாட்டி தனது வீட்டு மாடியில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மூதாட்டியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இங்கு சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.