உத்தரகாண்ட் மாநிலத்தின் பிஜ்னூரில் உள்ள அமான்கர் புலிகள் காப்பகத்தில் (Amangarh Tiger Reserve) சஃபாரி சென்ற சுற்றுலாப் பயணிகளின் (Tourists) ஜிப்சி வாகனத்தை ஒரு பிரம்மாண்டமான யானை (Tusker Elephant) துரத்திச் செல்லும் திகிலூட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. யானை தங்கள் வாகனத்தை நோக்கி ஓடி வருவதைக் கண்ட சுற்றுலாப் பயணிகளின் இதயத் துடிப்பு நின்றுபோனது.

இந்த வீடியோவில், காட்டுக்குள் சஃபாரி சென்று கொண்டிருந்தபோது திடீரென வந்த ராட்சத யானை, ஜிப்சி வாகனத்தைத் தொடர்ந்து விரட்டுகிறது.

இதைக் கண்ட வாகனத்தில் இருந்தப் பயணிகள் “ஓட்டுங்கள், ஓட்டுங்கள், ப்ளீஸ்… ஜிப்சியை ஓட்டுங்கள், யானை நம்மை நோக்கி வருகிறது” என்று அலறினர்.

எனினும், ஓட்டுநர் தனது திறமையையும் (Expertise) சாமர்த்தியத்தையும் பயன்படுத்தி, யானையை மேலும் ஆக்ரோஷமடையச் செய்யாமல், ஒரு பாதுகாப்பான தூரத்தை (Safe Distance) ஏற்படுத்தி, வாகனத்தை விரைவாக முன்னோக்கிக் கொண்டுச் சென்று அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளார்.