சென்னையைச் சேர்ந்த தம்பதி ஒருவர், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள புகழ்பெற்ற ‘தி லீலா பேலஸ்’ (The Leela Palace) நட்சத்திர ஹோட்டலுக்குச் சுற்றுலா சென்றனர்.
அங்கு அவர்கள் தங்கியிருந்த அறைக்குள், தம்பதியினர் குளியலறையில் இருந்த நேரத்தில், ஹோட்டல் ஊழியர்கள் மாஸ்டர் கீயைப் பயன்படுத்தி அத்துமீறி நுழைந்துள்ளனர்.
இதனால் கடும் அதிர்ச்சியும், மன உளைச்சலும் அடைந்த அந்தத் தம்பதி, ஹோட்டல் நிர்வாகத்தின் மீது சென்னை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த ஹோட்டல் தரப்பு, “அறையின் கதவில் ‘தொந்தரவு செய்யாதீர்கள்’ (Do Not Disturb) என்ற பலகையைத் தம்பதியினர் தொங்கவிடவில்லை,
அதனால்தான் ஊழியர்கள் உள்ளே சென்றனர்” என வாதிட்டது. ஆனால், இந்த வாதத்தை நிராகரித்த நீதிபதிகள், “விருந்தினர்கள் அறைக்குள் இருக்கும்போது ஊழியர்கள் நுழைவது அவர்களின் தனிப்பட்ட சுதந்திரத்தைப் பாதிக்கும் செயல்” எனக் கூறி, ஹோட்டல் நிர்வாகம் ₹10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தனர். சொகுசு ஹோட்டலில் நிம்மதியாக இருக்கச் சென்ற தம்பதிக்கு நேர்ந்த இந்த ‘பிரைவசி’ பயங்கரம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
