நெல்லை மாவட்டம் முக்கூடலைச் சேர்ந்த 80 வயது முதியவர் கோவிந்தசாமி, கடந்த 69 ஆண்டுகளாகத் தனது வாயில் ஒரு சிறிய கல்லை வைத்துக்கொண்டு வாழ்ந்து வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 1956-ஆம் ஆண்டு பள்ளிப் பருவத்தில் ஆறாம் வகுப்பு படிக்கும்போது, சரியாகப் பேச முடியாத ஒரு மாணவருக்காக ஆசிரியர் சொன்ன அறிவுரையைக் கேட்டு, விளையாட்டுத்தனமாகத் தானும் வாயில் கல்லைப் போட்டுக் கொண்டார்.
அப்போது அவருடன் இருந்த மற்ற நண்பர்கள் சில நாட்களிலேயே கல்லைத் துப்பிவிட்ட நிலையில், கோவிந்தசாமி மட்டும் அதைத் தொடர்ந்து இன்றுவரை பின்பற்றி வருகிறார். சாப்பிடும் நேரம், தூங்கும் நேரம், குளிக்கும் போது என எந்த ஒரு தருணத்திலும் அவர் அந்தக் கல்லைத் தனது வாயிலிருந்து எடுப்பதில்லை.
View this post on Instagram
“>
மேலும் ஒருமுறை அவரது மனைவி தூக்கத்தில் இருந்த கோவிந்தசாமியின் வாயிலிருந்து அந்தக் கல்லை எடுத்து நெல் மூட்டைக்குள் போட்டுவிட்ட போதிலும், விடாமுயற்சியுடன் அதைத் தேடிக் கண்டுபிடித்து மீண்டும் தனது வாயில் வைத்துக் கொண்டுள்ளார்.
தற்போதைய 80 வயதிலும் எவ்வித அசௌகரியமும் இன்றித் தனது அன்றாடப் பணிகளைச் செய்து வரும் கோவிந்தசாமியின் இந்த விசித்திரமான பழக்கத்தை, அவரது குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் ஒரு சாதனையாகவே வியந்து பார்க்கின்றனர்.
