உத்தரப் பிரதேசத்தின் பிலிபிட்டில் (Pilibhit, UP) பணிபுரியும் 27 வயதுப் பெண் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர், தனது கணவர் மற்றும் அவரதுக் குடும்பத்தினர் ஏழு பேர் மீது வரதட்சணைக் கொடுமை, கற்பழிப்பு (Rape) மற்றும் சித்திரவதை உள்ளிட்டக் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளார்.
கடந்த 2023, ஜனவரி 26-ஆம் தேதி மீரட்டில் திருமணம் நடந்த நிலையில், பெண்ணின் தந்தை ரூ.50 லட்சம் செலவழித்து ஒரு கார், நகைகள் மற்றும் பரிசுகளைக் கொடுத்துள்ளார். இருப்பினும், மாமியார் வீட்டில் SUV கார் கேட்டுத் தொடர்ந்துத் தொல்லைக் கொடுத்துள்ளனர்.
இதில், கணவரின் அண்ணன் தன்னை துப்பாக்கி முனையில் கற்பழித்ததாகவும், கணவர் வேறு பெண்ணுடன் இருந்ததை அறிந்தபோது, கிருமிநாசினியைக் குடிக்கச் செய்துத் தாக்கியதாகவும் அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
அதோடு, ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக, கர்ப்ப காலத்தில் தன்னை ‘கரு மாற்ற மருந்து’ (Embryonic transformation medicine) எடுக்கக் கட்டாயப்படுத்தியதாகவும் அவர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்த மருந்துகளால் பிறந்த குழந்தைக்கு வலிப்பு நோய் (Seizures) ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில், கணவர் உள்ளிட்ட ஏழு பேர் மீது வரதட்சணைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.
