லக்னோவின் (Lucknow) சலார் கஞ்ச் பகுதியில், சூரிய பிரதாப் சிங் என்ற நபர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவரது லிவ்-இன் துணையும் (Live-in Partner), அவரது இரண்டு மகள்களும் சேர்ந்து இந்தக் கொலையைச் செய்திருப்பதுத் தெரிய வந்துள்ளது.

சூரிய பிரதாப் சிங், அந்தப் பெண்ணின் முதல் கணவர் இறந்த பிறகு அவருடன் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.

சூரிய பிரதாப் சிங் தனதுப் பெரிய மகளுக்குப் பாலியல் தொல்லை (Wrongly touched) கொடுத்து வந்ததாகவும், வீட்டில் மூன்று சிசிடிவி கேமராக்கள் பொருத்தி அனைவரையும் சிறை வைத்தது போலக் கண்காணித்து வந்ததாகவும் அந்தப் பெண் போலீஸ் விசாரணையில் குற்றம் சாட்டியுள்ளார்.

சம்பவம் நடந்த அன்று, மகளைச் சூரிய பிரதாப் சிங் அறையில் பூட்டியபோது ஏற்பட்டச் சண்டையில், தாயும் மகள்களும் சேர்ந்து கத்தியால் சூரியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்ததாக அந்தப் பெண் வாக்குமூலம் அளித்துள்ளார். எனினும், இந்தக் கொலை திட்டமிடப்பட்டதா? என்றக் கோணத்திலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.