உத்தரப் பிரதேசத்தின் பில்ஹவுரில் (Bilhaur, UP) ஒரு கொடூரமானச் சம்பவம் நடந்துள்ளது. குடும்ப உறவின் மரியாதையை மறந்து, ஒருவன் தனதுச் சொந்த அண்ணியுடன் தவறாக நடக்க முயன்றதோடு, அதைப் பார்த்த அண்ணனின் மூக்கைக் கடித்துத் துண்டித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று (திங்கள் கிழமை) இரவு, ஒரு கிராமத்தைச் சேர்ந்த அந்தப் பெண், தன் கொழுந்தன் ரம்ஜானி (Ramjani) தன் அறைக்குள் நுழைந்துத் தன்னுடன் தவறாக நடந்துகொள்ள முயன்றதாகப் புகார் அளித்துள்ளார்.

அவர் எதிர்த்தபோது, ரம்ஜானி சண்டையிட்டுள்ளார். சத்தத்தைக் கேட்டு அறைக்குள் வந்த அண்ணன், மனைவியைக் காப்பாற்ற முயன்றபோது, ரம்ஜானி தன் அண்ணனின் கட்டைவிரலைக் கடித்ததுடன், மூக்கையும் கடித்துத் துண்டித்துள்ளார்.

பின்னர், கொலை மிரட்டல் விடுத்துத் தப்பி ஓடியுள்ளார். காயமடைந்த கணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.