சமூக வலைத்தளங்களில் கடந்த நவம்பர் மாதக் கடைசி வாரத்தில் இருந்து 19 நிமிடம் 34 வினாடிகள் ஓடக்கூடிய, ஒரு இளம் ஜோடியின் அந்தரங்கப் பகுதியைக் காட்டும் வீடியோ ஒன்று தீவிரமாகப் பரவி வருகிறது.
இது குறித்துப் பேசிய என்சிபி சைபர் செல் அதிகாரி அமித் யாதவ் (Amit Yadav), இந்த வீடியோ முழுவதும் ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோ (AI-generated video) என்று உறுதி செய்துள்ளார்.
மேலும், இதன் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகங்கள் என்றும் சில வீடியோக்கள் பரவி வருவதாகவும், அவற்றையும் ஏ.ஐ. தொழில்நுட்பமே உருவாக்கியுள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
View this post on Instagram
இத்தகைய ஆபாசமான அல்லது ஆட்சேபனைக்குரிய வீடியோக்களை இணையத்தில் பகிர்வது இந்தியச் சட்டப்படி கடுமையான குற்றமாகும். இந்த வீடியோவைப் பரப்புவது தனிநபரின் தனியுரிமை மீறலாகும் (Violation of Privacy) என்றும் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் (IT Act) பிரிவு 67A-இன் கீழ், பாலியல் ரீதியானத் தகவல்களைப் பகிர்பவர்களுக்கு முதல் முறைக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 10 லட்சம் அபராதமும் விதிக்கப்படலாம்.
திரும்பத் திரும்ப இதே குற்றத்தைச் செய்தால் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும் என்பதால், அந்த வீடியோவைப் பகிர வேண்டாம் என்று போலீஸார் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
