உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் பள்ளி ஆசிரியர் ஒருவரின் செயல் இணையத்தில் வைரலாகி உள்ளது. குல்ஷன் கேன் என்ற அந்த ஆசிரியர், தனது காரை ஓட்டும்போது தலையில் முழு ஹெல்மெட் அணிந்து செல்கிறார். இதற்கு காரணம், கடந்த மாதம் அவர் சீட் பெல்ட் அணிந்திருந்தும், கார் ஓட்டும்போது ஹெல்மெட் அணியவில்லை என்று கூறி ₹1,100 அபராதம் விதிக்கப்பட்டதாம்.

​இந்த வினோத அபராதத்தால் அதிர்ச்சி அடைந்த அவர், இனிமேல் தவறான சலான் விழாமல் இருக்க, கார் ஓட்டும்போது ஹெல்மெட் அணிவதுதான் ‘விதி’ என்று கூறி இப்படிச் செயல்படுகிறார். சட்டத்தை மதிக்கும் குடிமகனாக இதைத் தொடர்வதாக அவர் கூறுகிறார். இந்த வேடிக்கையான சம்பவம் சமூக வலைதளங்களில் பலத்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.