உலகில் கடவுளால் எல்லா நேரத்திலும் நம்முடன் இருக்க முடியாது என்பதற்காகவே அன்னையைப் படைத்தார் என்று சொல்வதுண்டு. அந்த வகையில், தனது உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் குழந்தையைக் காப்பாற்ற ஒரு தாய் தன்னையே தியாகம் செய்த நெகிழ்ச்சியான காணொளி ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி, பார்ப்போர் கண்களில் கண்ணீரை வரவழைத்துள்ளது. வைரலாகி வரும் அந்தக் காணொளியில், ஒரு பெண் தன் குழந்தையுடன் நகரும் படிக்கட்டில் இருந்து கீழே இறங்கும்போது, எதிர்பாராத விதமாக படிக்கட்டின் ஒரு பகுதி உடைந்து விபத்துக்குள்ளாகிறது.

 

படிக்கட்டு உடைந்த அடுத்த வினாடியே, கீழே விழ இருந்த அந்தப் பெண், ஒரு நொடிகூடத் தாமதிக்காமல் தனது குழந்தையை மேலே இருந்தவர்களை நோக்கி தூக்கி எறிந்து காப்பாற்றுகிறார். அங்கு நின்றிருந்த இரண்டு பெண்கள் குழந்தையைப் பத்திரமாகக் கைப் பிடித்துக் காப்பாற்றி விடுகின்றனர். மேலும், அந்தத் தாயைக் காப்பாற்றவும் அவர்கள் முயற்சித்தபோதும், துரதிர்ஷ்டவசமாக அந்தப் பெண் உடைந்த படிக்கட்டுக்குள் சிக்கி விழுந்துவிட்டார்.

இந்த நெகிழ்ச்சியான காணொளியைக் கண்ட இணையவாசிகள் பலரும் துக்கத்துடன் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர். ஒரு தாய் மட்டுமே யோசிக்காமல் இப்படிப்பட்ட மகத்தான தியாகத்தைச் செய்ய முடியும் என்று நெட்டிசன்கள் பலரும் அந்தத் தாயின் பாசத்தைப் போற்றி வருகின்றனர். இந்தக் காணொளியைப் பார்த்த பிறகு நகரும் படிக்கட்டில் ஏறவே அச்சமாக இருக்கிறது என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.