மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் இந்தூரில், ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் பாதுகாப்பு இல்லாமல் நாகப்பாம்பைப் பிடிக்க முயன்ற போது, அந்த பாம்பு அவரைக் கடித்தது. இது தொடர்பான 25 வினாடிகள் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

 

வீடியோவில், சம்பந்தப்பட்ட கான்ஸ்டபிள் ஒரு ஜன்னலைத் திறந்து, பாம்பைப் பார்த்தவுடன் அதை விரைவாக கையால் பிடிக்கிறார். அதற்கிடையே பாம்பு அவரைக் கடிக்க, அவர் சற்றும் பதறாமல் “எதுவும் ஆகல… பரவாயில்ல” என்று மக்களுக்கு கூறுகிறார். பின்னர், மக்கள் கேட்கும் போது, அது “கருப்பு நாகம்” என அவர் உறுதியாக பதிலளிக்கிறார். ஆனால் பாம்பின் விஷத்தன்மை காரணமாக, அவரது உடல்நிலை மோசமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனளிக்கவில்லை.

இந்த சம்பவம் பாம்பு பிடிப்பவர்களுக்கும், பொதுமக்களுக்கும் கடுமையான எச்சரிக்கையாக உள்ளது. விஷப்பாம்புகளை கையாளும் போது தொழில்முறை பயிற்சி மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் அவசியம் என்பதையும், ஒரு நிமிட அவசர முடிவால் உயிரிழக்கும் அபாயம் ஏற்படக்கூடும் என்பதையும் இந்த சம்பவம் நினைவூட்டுகிறது. அரசு மற்றும் காவல் துறைகள் இத்தகைய விஷயங்களில் அலட்சியம் காட்டக் கூடாது என்பதே இந்த வீடியோ தரும் வேதனையான பாடமாகும்.