சமூக வலைதளங்களில் நாம் காணும் சில வீடியோக்களை நம்புவது கடினமாக இருக்கும். காரணம், அதில் பல வீடியோக்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படுகின்றன. அவ்வாறு உருவாக்கப்பட்ட ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், சுமார் இரண்டு வயது மதிக்கத்தக்க ஒரு சிறு குழந்தை, தன் கையில் இருக்கும் ஹீலியம் பலூன்களுடன் வானத்தில் பறந்து செல்வது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Spotnews (@spotnews24)

இந்த வீடியோ, ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மூலம் அழகாக உருவாக்கப்பட்டிருந்தாலும், இதில் இருந்து ஒரு முக்கியப் பாடம் கிடைப்பதாகக் கருதப்படுகிறது. இது போன்ற காட்சிகள் நிஜ வாழ்க்கையில் நடக்க வாய்ப்பில்லை என்றாலும், பெற்றோர்கள் தங்கள் சிறு குழந்தைகளைத் தனியாக விடுவதன் ஆபத்துகள் குறித்தும், பாதுகாப்பு குறித்தும் இந்த வீடியோ ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. இதுபோன்ற சாகசக் காட்சிகள் மூலம் பொழுதுபோக்கு கிடைத்தாலும், குழந்தைகள் மீதான கண்காணிப்பு எந்த அளவு முக்கியம் என்பதையும் இது உணர்த்துகிறது.