கோவா மாநிலம் கனகோனா (தெற்கு கோவா) பகுதியில் உள்ள ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பரதகலி ஜீவோட்டம் மடத்தில் உருவாக்கப்பட்ட 77 அடி உயர ஸ்ரீராமர் வெண்கல சிலை இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதனை ஒட்டி மடத்தில் விரிவான பிராண பிரதிஷ்டை பூஜைகள் நடைபெற்றன.
இதற்குமுன் கர்நாடக மாநிலம் உடுப்பி கிருஷ்ணர் கோவிலில் தரிசனம் செய்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து கோவாவுக்கு பயணித்து, மடத்தில் நிறுவப்பட்ட இந்த மாபெரும் வெண்கல சிலையை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார். நிகழ்வில் சுமார் 1.2 லட்சம் பக்தர்கள் பங்கேற்றதாக ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.
#WATCH | Goa | Prime Minister Narendra Modi unveiled a 77-foot statue of Lord Ram made up of bronze at Shree Samsthan Gokarn Partagali Jeevottam Math.
The Prime Minister is visiting the math on the occasion of ‘Sardha Panchashatamanotsava’, the 550th-year celebration of the… pic.twitter.com/LgSQEvASbc
— ANI (@ANI) November 28, 2025
மேலும் குஜராத்தில் அமைந்துள்ள “ஒற்றுமைச் சிலை”யை வடிவமைத்த புகழ்பெற்ற சிற்பி ராம் சுதார், இந்த ஸ்ரீராமர் சிலையையும் உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
